காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமக்கள் முன்னிலையில் பெண் வி. ஏ. ஓ. , வை ஒருமையில் பேசி திட்டியதால், பெண் வி. ஏ. ஓ. , பணியை ராஜினாமா செய்து கடிதம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, கொளப்பாக்கம் கிராமத்தில் மழை நீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் நேற்று சென்றார். அப்போது கொளப்பாக்கம் கிராமம் புல எண் 212ல் வழங்கப்பட்ட பட்டா குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு வி. ஏ. ஓ. , பாரதி சரியான பதில் அளிக்க சற்று தடுமாறியதாக கூறப்படுகிறது.
இதனால், கோபம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தனது கைகளை உயர்த்தி, பெண் வி. ஏ. ஓ. , பாரதியை பொதுமக்கள் முன்னிலையில், ஒருமையில் பேசி, திட்டியாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வி. ஏ. ஓ. , பாரதி, தன் பணியை ராஜினாமா செய்கிறேன் என ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரனிடம் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று கடிதம் வழங்கினார்.
அந்த கடிதத்தில், 'என்னை பெண் கிராம நிர்வாக அலுவலர் என்றும் பார்க்காமல் பொதுமக்கள் முன்னிலையில், அவமானம்படுத்தம் படி பேசியது எனக்கு மிகுந்த மன வேதனையும், மன உளைச்சலையும் தருகிறது. 'எனவே, நான் அதிகாரிகளின் மிரட்டும் போக்கினால் மன உளைச்சளில் இருப்பதால் எனது பணியை ராஜினாமா செய்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment