பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன.. இந்த அட்டூழியங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், கண்டித்தும் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது இன்னொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.. பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில், ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள்..
கொலை
அங்கிருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் புகுந்து, மர்மநபர்கள் குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொலை குறித்த விசாரணையை ஜின்னா டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பெண் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்... அவரிடம் விசாரணையும் ஆரம்பமானது.
நடனம்
அப்போதுதான் திடீரென அந்த பெண்ணின் ஆடையை களைய சொன்னார் பெண் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்.. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவும், மிரட்டியே ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக்கினர்.. ஒரு பாட்டை ஒலிக்க செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவரை டான்ஸ் ஆட சொல்லி உள்ளனர்.. நிர்வாணமாக டான்ஸ் ஆடிய நிலையில், அதையும் வீடியோவாக பெண் போலீசார் எடுத்துள்ளனர்.
விசாரணை
இந்த சம்பவம்தான் அங்கு வெடித்து கிளம்பி உள்ளது.. போலீஸ் துணை ஐஜி முகமது அசாருக்கு இது தொடர்பான புகாரும் பறந்தது.. அதிர்ச்சி அடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தார்.. அதன்படியே, விசாரணையில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத், பெண்ணை நிர்வாணமாக்கி டான்ஸ் ஆட வைத்தது உறுதி செய்யப்பட்டது... இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வைத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
ஷபானா இர்ஷத்துக்கு உடந்தையாக இருந்த புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல், சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது, பாதிக்கப்பட்ட பெண் விசாரணை கைதி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்... பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய பெண் போலீசாரே, இப்படி ஒரு அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment