செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லத்தில் தி.மு.க-வினர் மதிய உணவு வழங்கினர்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கு.ராம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிழ்ச்சியானது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அவர்களின் தலைமையிலும், அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியக்குழு பெருந்தலைவருமான கே.கண்ணன் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவிலான தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு 🖤❤️
ReplyDeleteசிறப்பு ��❤️
ReplyDelete