வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் - இராமாபுரம் சாலைகளில் காவு வாங்கும் பெரும் பள்ளங்கள் | Acharapakkam - Elapakkam - Ramapuram Road Issue | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 14, 2021

அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் - இராமாபுரம் சாலைகளில் காவு வாங்கும் பெரும் பள்ளங்கள் | Acharapakkam - Elapakkam - Ramapuram Road Issue | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,  அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் மாநில நெடுஞ்சாலை மற்றும் எலப்பாக்கம் - இராமாபுரம் மாநில நெடுஞ்சசாலைகளில் சுமார் அரை அடி ஆழத்திற்கு ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய நிறுவனத்திரால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் - மதூர்

எலப்பாக்கம் - சென்னை, எலப்பாக்கம் - வந்தவாசி, எலப்பாக்கம் - காஞ்சிபுரம் - திண்டிவனம் - காஞ்சிபுரம் என பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதற்காக பிரதானமாக பயன்படுத்தப்படும் இந்த நெடுங்சாலையானது இத்தகைய அவல நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. 

 

மோகல்வாடி குளக்கரை அருகே உள்ள பள்ளம்

இத்தகைய பள்ளங்களில் மழைகாலங்களில் வாகனங்கள் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பெரும் விபத்துகளில் வாகன ஓட்டிகள் சிக்குகின்றனர். 


இந்த வழியாக செல்லும் அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல இயலாத அவலநிலை ஏற்படுகிறது.

மேலும், பின்னப்பூண்டி மற்றும் அச்சிறுபாக்கம் டாஸ்மாக் கடைக்கு சென்றுவரும் மதுப்பிரியர்கள் வாகனங்களை இந்த சாலைகளில் இயக்கும்போது இதுபோன்ற பள்ளங்களில் முற்றிலும் நிலைதடுமாறி அப்பாவி மக்களின்மீது மோதி அவர்களின் உயிர்களுக்கும் சோகம் விளைவிக்கும் சூழல் அதிகமாக உள்ளது.

பின்னப்பூண்டி டாஸ்மாக் அருகே வெள்ளைகுளம் பகுயில் உள்ள பள்ளம்

இராமாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 20-க்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இராமாபுரம் மற்றும் கோட்டகயப்பாக்கம் அருகே பெட்ரோலிய நிறுவனத்தினரால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிசெய்யாததால் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு தற்போது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

பின்னப்பூண்டி பேருந்து நிலையம் அருகே வளைவு பகுதியில் காணப்படும் சாலை பள்ளங்கள்

அந்த விபத்தின் புகைப்படங்கள் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் அவர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு சாலையில் உள்ள பள்ளங்கள் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இருந்தபோதிலும் கனரக வாகன போக்குவரத்தால் மீண்டும் பழைய நிலைக்கு அந்த பள்ளங்கள் மாறிவிட்டன.

பின்னப்பூண்டி டாஸ்மாக் அருகே வெள்ளைகுளம் பகுயில் உள்ள பள்ளம்

எனவே, இதுபோன்ற மனித உயிரை குறிவைக்கும் பள்ளங்களை உடனடியாக நிரந்தரமாக சரிசெய்யவேண்டுமென வாகன ஓட்டிகளும், கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசு அதிகாரிகளிடம் கோருகின்றனர்.

எலப்பாக்கம் - ஆனைக்குன்னம் செல்லும் சாலை - பரபரப்பான பஜார் பகுதிக்கு நடுவில் உள்ள சகதியான சாலை


மதூர் - கோட்டகயப்பாக்கம் கூட்ரோடு இடையே உள்ள பள்ளம்

மதூர் - கோட்டகயப்பாக்கம் கூட்ரோடு இடையே உள்ள பள்ளத்தில் வாகன டயர்கள் சிக்கும் காட்சி

No comments:

Post a Comment