சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ண பிரசாத் மீது அவரது மனைவி அர்ச்சனா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை என புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க தாம்பரம் மகளிர் காவல் நிலையம் காஞ்சிபுரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு புகாரை அனுப்பி இருந்தது.
அந்த புகாரை விசாரித்து கிருஷ்ண பிரசாத்துக்கு சாதகமாக ஒரு தலைபட்சமாக தனது அறிக்கையை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க கிருஷ்ணா பிரசாத்திடம் சமூகநலத்துறை அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்து வரும் பிரேமா என்பவர் கிருஷ்ணபிரசாத் இடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்.
50 ஆயிரம் ரூபாயில் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் கிருஷ்ண பிரசாத்திடம் இருந்து பிரேமா வாங்கும் போது கையும் களவுமாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சமூகநலத்துறை அலுவலகத்தில் மற்ற அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment