தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் பேரீட்சை சாகுபடியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ரகங்கள் இருந்தாலும் அதில் தரமான கண்டறியபட்ட பர்ரீ, அஜ்ஜூவா, கனீஜி, அலூவி, மெட்சூல், இலைட் போன்ற ரகங்களை தேர்வு செய்து ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடை இடையே பேரிட்சையை நடவு செய்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.
நடவு செய்த மூன்று வருடத்திலேயே தற்போது முதல் அறுவடையாக பேரீட்சை பழங்கள் அறுவடைக்கு வரத்தொடங்கியுள்ளன. ஜனவரியில் பேரீட்சை மரங்களில் பூக்கள் பிடித்து ஜீன், ஜீலை மாதங்களில் பழம் அறுவடைக்கு வந்துவிடுவதாகவும், வருடத்திறகு ஒரு முறை பலன் தரக்கூடிய இந்த பேரீட்சையை மற்ற விவசாயாகளும் நம்பிக்கையோடு பயிர் செய்து வருமானம் ஈட்டலாம் என்கிறார்.
அரியக்குளம் கிராமத்தில் பல வருடமாக பேரீட்சை சாகுபடியில் ஈடுபட்டு வரும் அனுபவம் பெற்ற விவசாயியான நிஜாமுதின், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களின் பேரிலும், அவரிடமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபட்ட பேரீட்சை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி நடவு செய்து வருகின்றனர்.
ஆண்டுக்காண்டு பருவ மழை குறைந்து விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்றுத்தொழிலை நாடி செல்லும் நிலையில், இருக்கின்ற தண்ணீரையே சிக்கனமாக பயன்படுத்தி பேரீட்சை சாகுபடி செய்து மற்ற விவசாயிகளும் வருமானம் ஈட்ட முடியும் விவசாயிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment