மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.
பலர் காயமடைந்தனர். அதில் இறந்த 13 நபர்களின் குடும்பத்தினர் மற்றும் கடுகாயமடைந்த 3 நபர்களுக்கு அரசு வேலைக்கான பணியாணையை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.
No comments:
Post a Comment