கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடை வெளி கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன், 55வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கலெக்டர் ரா.கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அனைவரும் தடுப்பு ஊசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பு தடுப்பது தொடர்பான ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளைச் சேர்ந்த சுமார் 52 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் அல்லது அவர்களை மாஸ்க் அணிந்து வரச் சொல்ல வேண்டும்.
அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகைப் பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment