விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு தான் பாராட்டுகள் வந்து குவிந்தது. மாஸ்டர் விஜய் அல்ல மாறாக விஜய் சேதுபதியின் படம் என்று விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் புச்சிபாபு சனா இயக்கத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேனா தெலுங்கு படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை பார்த்தவர்களும் வில்லன் விஜய் சேதுபதியை கொண்டாடினார்கள், கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மாஸ்டர், உப்பேனா ஆகிய படங்களில் வில்லத்தனம் செய்து பாராட்டு வாங்கிய விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து வில்லனாக நடிக்கும் ஆசையும் இருக்கிறது. இந்நிலையில் தான் கமல் ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தில் அதுவும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதியை தேடி வந்திருக்கிறது.
வாய்ப்பு வந்தாலும் அவர் உடனே ஓகே சொல்லிவிடவில்லை. காரணம் அவர் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் கமல் படத்திற்கு டேட்ஸ் கொடுப்பது கஷ்டம். இருப்பினும் கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது விஜய் சேதுபதியின் நீண்ட நாள் ஆசை.
அந்த ஆசையை நிறைவேற்ற தன் டேட்ஸை எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி விக்ரம் படத்தில் நடித்துவிட வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. வில்லனாக நடித்து வெற்றியை சுவைத்து ருசி கண்டதால் அட்ஜஸ்ட் முடிவில் இருக்கிறார் போன்று.
என்னை கமல் சாருக்கு வில்லனாக நடிக்க கூப்பிட்டிருக்கிறார்கள் என்று விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதை பார்த்த கமல் ரசிகர்களுக்கு தலையில் இடி இறங்கியது போன்றாகிவிட்டது. மாஸ்டரை போன்று விக்ரம் படத்திலும் ஹீரோவை டம்மியாக்கிவிட்டு, வில்லன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை கெத்தாக காட்டிவிடுவாரோ லோகேஷ் கனகராஜ் என்பது தான் கமல் ரசிகர்களின் பயமே.
விக்ரம் படத்தில் நடிப்புக்கு பெயர் போன மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் என்றால் ஃபஹதின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விக்ரம் படத்தில் நடிப்புக்கு பெயர் போன மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் என்றால் ஃபஹதின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment