தாம்பரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தக் காலம் 2019-ல் முடிவடைந்துவிட்ட நிலையிலும், அந்த பாதையில் செல்லும் வாகனங்களுக்கு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற (Madras High Court) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் ராமமூர்த்தி அடங்கிய சட்ட அமர்வு சுங்கக் கட்டணம் தொடர்பாக அதிருப்தியை தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று தெரிவித்தனர்.
அதோடு, தமிழக சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று நெடுஞ்சாலைத்துறைக்கு (National Highways Authority of India) உத்தரவிட்டனர். சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் (FASTag) முறை இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment