தேர்தலுக்கு
பின் நாம் தமிழர், அம்மா
மக்கள் முன்னேற்ற
கழகம், மக்கள்
நீதி மய்யம்
ஆகிய கட்சிகள்
என்ன மனநிலையில்
உள்ளன என்பது இதோ...!
2021 சட்டமன்றத்
தேர்தலில் ஐந்து முனைப் போட்டி
நிலவியது. திமுக, அதிமுக என
இரு பிரதான கட்சிகளின் தலைமையில்
அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும்
வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய
நிலவரம் கூறுகிறது.
சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.
தமிழகம்
முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக
சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த முறை நாம் தமிழர்
கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப்
பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை
பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்.
அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.
அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.
ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.
No comments:
Post a Comment