தமிழக சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்நாள்
முதல் கையெழுத்து என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் டாப் தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை தமிழக சட்டசபை
தேர்தலில் கண்டிப்பாக வெல்ல போகிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தேர்தல்
கணிப்புகள் எல்லாம் திமுகவிற்கு மாபெரும் வெற்றி என்று ஒரு பக்கம் கூறி
வருகிறது.
இன்னொரு பக்கம் திமுக தலைமைக்கு சென்று பல்வேறு இன்டர்னல் சர்வே தொடங்கி
ரிப்போர்ட்டுகள் வரை எல்லாமே திமுக கண்டிப்பாக பெரிய வெற்றியை இந்த முறை
பெறும், 150+ தொகுதிகளை கண்டிப்பாக வெல்லும் என்றே கூறுகின்றன.
வெற்றி
திமுக தலைவர் ஸ்டாலினோ எப்படியாவது 200+ தொகுதிகளில் வென்று 1996ல் வென்றது
போல புதிய புரட்சியை செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார்.
திமுகவின் வெற்றியை கட்சியின் டாப் தலைவர்கள் நம்புவதால்தான் இப்போதே
அமைச்சரவை ஒதுக்கீடு குறித்த திட்டங்களை வகுக்க தொடங்கி விட்டனர்.
தேர்தலுக்கு பின் யாருக்கு அமைச்சரவை பொறுப்புகளை கொடுக்கலாம் என்று
ஆலோசிக்க தொடங்கி விட்டனராம்.
ஆலோசனை
கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த அமைச்சரவை பொறுப்புகளை கொடுக்கலாம்,
கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் என்ன இடங்களை
கொடுக்கலாம் என்று இப்போதே திமுக தலைமை லிஸ்ட் ஒன்றை ரெடி செய்து வருவதாக
கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு கட்சியில்
வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பல நிர்வாகிகளுக்கும் சிறப்பு
பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாம்.
பொறுப்புகள்
அதிருப்தியை சமாளிக்கும் வகையில் எல்லோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக
ஸ்டாலின் லிஸ்ட் ஒன்றை ரெடி செய்து கொண்டு இருக்கிறாராம் . இந்த நிலையில்
ஆட்சிக்கு வந்ததும் முக்கியமான சில திட்டங்களை அனுமதித்து ஸ்டாலின் முதல்
கையெழுத்தை போடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தினத்தந்தி செய்தி
நிறுவனத்திடம் ஸ்டாலினே வெளிப்படையாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் பேச்சு
அதன்படி "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற சுற்றுப்பயணத்தில் ஸ்டாலின்
வாங்கிய மனுக்கள் குறித்து தீர்வு காண்பதற்காக தனியாக ஒரு துறையை
உருவாக்குவதே தன்னுடைய முதல் கையெழுத்தாக இருக்கும் என்று ஸ்டாலின்
குறிப்பிட்டுள்ளார். இந்த மனுக்களில் இருக்கும் புகார்கள் அனைத்திற்கும்
தீர்வு காணும் வகையில் தனி துறையை உருவாக்கி... 100 நாட்களில் அதை
தீர்ப்பதே தன்னுடைடைய முதல் கையெழுத்து என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வேறு சில திட்டம்
அதோடு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 கொடுப்பது, கொரோனா நிதி
வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல் நாள் கையெழுத்தில் ஸ்டாலின்
வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. சில பெரிய அறிவிப்புகள் வரும் என்றும்
கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கையெழுத்து
இது தொடர்பாக கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது அவர்களும் முதல் நாள்
கையெழுத்தில் பல முக்கிய அறிவிப்புகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்படும்..
முதல் சட்டசபை கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்
என்று நம்பிக்கையாக கூறுகிறார்கள்!
No comments:
Post a Comment