செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் நகராட்சியில் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட சில்லரை வணிகக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சந்தைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்படுவார்கள் என கூறினார்.
தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதில் கட்டாயம் உள்ளிட்டவை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும்,மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment