பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசும் வருமான வரித்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க வேண்டிதன் கடைசி தேதிகளை அவ்வப்போது அறிவித்துவந்த நிலையில் மார்ச்,31,2021 தான் கடைசி தேதி இறுதியான கடைசி தேதி எனவும், இந்த தேதிக்குள் இணைக்காவிடில் ரூ.10,000/- அபராதம் செலுத்த வேண்டும் எனவும், கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட அறிவிப்பன்படி ரூ.1,000/- அபராதம் எனவும், அதுமட்டுமல்லாமல் பான் கார்டு செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் இணையம் வழியாக பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்கும் பணியினை மேற்கொண்டனர். இதில் உள்ள சிக்கல் என்னவெனில் ஆதார் அட்டையில் உள்ள விவரப்படி பான் கார்டிலும் பெயர் மற்றும் பிறந்த தேதி கட்டாயம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் பலரது பான் கார்டுகளின் தவறான விவரம் உள்ளதால் அதனை உடனே சரிசெய்ய இயலாது.
மேலும், கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட இன்று(31.03.2021) அனைத்து தரப்பு மக்களும் பான் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணினை இணைக்க அதிகாரப்பூர்வ வலைதளத்தினை நாடியதால் சர்வர் முடங்கியது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பான் ஆதார் இணைப்பு லிங்க் காணமால் போனதால் பொதுமக்கள் அதிர்ச்சியுற்ற நிலையில் தற்போது அதே வலைதளத்தில் ஜீன் 30,2021 (30.06.2021) வரை பான் ஆதார் இணைப்பினை மேற்கொள்ளலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறையினரின் மேல் கடும் விரக்தியில் இருந்த பாமரமக்களில் பலர் ஒன்றும் புரியாமல் தத்தளித்த நேரத்தில் இந்த செய்தி அவர்களின் மனதில் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், அரசின் இதுபோன்ற அதிர்ச்சி தகவல்களை மாற்றிக் கொண்டு கிராமப்புற மக்களும், வயதானவர்களும் எளிதில் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் எளிதில் செயல்படுத்தப்படும் வகையில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment