செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகில் கடந்த மாதம் வேகத்தடை புதியதாக அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடையானது (Speed Breaker) சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களின் நிழல் அதிகம் விழும் பகுதியில் உள்ளது.
மேலும், இந்த வேகத்தடையின் மீது “வெள்ளை பட்டை (அதாவது Stud)” ஏதும் போடப்படாமல் அதற்கு பதிலாக வெள்ளை வண்ணப்பூச்சினை பூசிவைத்துள்ளனர். இந்த பூச்சானது தொடர் வாகன போக்குவரத்தின் காரணமாக அழிந்து கொண்டே வருகிறது.
இதனால் வேகமாக வரும் வாகனங்களுக்கு இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரியாத காரணத்தினால் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையின்மீது வேகமாக ஏறி இறங்கி தலையில் இடித்துக் கொள்ளும் அபாயங்களும், இருசக்கர வாகனங்களின் வருபவர்கள் கீழே விழும் அவலங்களும் அவ்வப்போது ஏற்படுகிறது.
குறிப்பாக இருசக்கர வாகனங்களின் பின்புறம் மகளிர் மற்றும் குழந்தைகள் அமர்ந்திருந்தால் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் வாகனம் கட்டுப்பாடின்றி சென்று மரத்தின் மீது மோதும் அபாயங்களும் உள்ளது.
எனவே, இதுபோன்ற நிலை தொடர்ந்து ஏற்படாமல் இருக்க, வேகத்தடையின் மீது முறையாக “வெள்ளை பட்டை (அதாவது Stud)” போடப்பட வேண்டும் எனவும், பிரதிபலிப்பான்கள் (Reflectors) அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment