தமிழக தேர்தல் களம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பரபரப்பிற்கு பஞ்சமின்றி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான அ.தி.மு.க மற்றும் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களை அனைத்து மக்கள் சக்தியின் மாநிலத் தலைவர் கலைமகன். டாக்டர் எஸ்.வெங்கடேசன் நேரில் சந்தித்து ஆதரவு அளித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜா.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் நிலையில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் ஆதரவு குறித்து எடுத்துரைத்து பொதுமக்களிடம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-விற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் இதுவரை எந்தெந்த தேதிகளில் எந்தெந்த வேட்பாளர்களை சந்தித்து ஆதரவு அளித்துள்ளார் என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
சைதாப்பேட்டை
கடந்த 13.03.2021 அன்று அதிமுக சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்யூர்
கடந்த 15.03.2021 அன்று அதிமுக சார்பில் செய்யூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கணிதாசம்பதை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் விளக்கு:
கடந்த 15.03.2021 அன்று அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு சுந்தரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர், பாரதிய ஜனதா கட்சியில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர். அதுமட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த தமிழக திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்போரூர்:
கடந்த 17.03.2021 அன்று அ.தி.மு.க கூட்டணி கட்சியான பா.ம.க சார்பில் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருக்கச்சூர் ஆறுமுகத்தை (Ex. M.L.A) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
விருகம்பாக்கம்:
அதிமுக சார்பாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் விருகை வி. என்.ரவியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைலாப்பூர்:
கடந்த 17.03.2020 அன்று அதிமுக சார்பில் மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும். ஆர்.நடராஜை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாவரம்
கடந்த 17.03.2021 அன்று அதிமுக சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரனை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு
கடந்த 17.03.2021 அன்று அதிமுக சார்பில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் காஜா என்கிற கஜேந்திரனை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம்
கடந்த 17.03.2021 அன்று நேரில் அதிமுக சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.டி.கே.எம்.சின்னையாவை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார். இவர், அனைத்துலக எம்.ஜி. ஆர் மன்றத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலந்தூர்:
கடந்த 21.03.2021 அன்று அதிமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களமிரங்கியுள்ள பா.வளர்மதியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் அ.தி.மு.க-வின் இலக்கிய அணிச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாநகர்:
கடந்த 22.03.2021 அன்று அதிமுக சார்பில் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கோகுல இந்திராவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் அ.தி.மு.க-வில் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.நிர்வாகிகள் சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார்.
மகளிர் தின கொண்டாட்டம்
கடந்த 08.03.2021 அன்று பாஜக-வைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணனை மகளிர் தினத்தன்று நேரில் சந்தித்தார். இவர் முன்னாள் கப்பல் துறை அமைச்சராகவும், இணை அமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. மகளிர் தினத்தன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக அனைத்து மகளிருக்கும், அன்னையருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் அன்னையர் தின வாழ்த்துக்கள் கலைமணி டாக்டர். எஸ் வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்த சந்திப்புகளின்போது மாஸ்டர் V.ம.பொ.சி குடும்பத்தினர், செ.கலையரசி, இலக்கிய அணி செயலாளர், ஜோ.கீர்த்தி மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சில முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment