நேற்று வெளியான திமுக வேட்பாளர்கள் பட்டியலில் மருத்துவர்கள்,
பொறியாளர்கள் என்று படித்தவர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது.
கூட்டணி
கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியது போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக
களமிறங்குகிறது. நேற்று வெளியான திமுக வேட்பாளர் பட்டியலில் பல சுவாரசியமான
விவரங்கள் அடங்கி உள்ளன.
திமுகவில் பொதுவாக வேட்பாளர் தேர்வில் படித்தவர்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல் இந்த முறையும் வேட்பாளர்
பட்டியலில் படித்தவர்கள் பலர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
வழக்கறிஞர்கள்:
இந்த வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 31 வக்கீல்கள்
இடம்பெற்றுள்ளனர். திமுகவில் எப்போதும் வக்கீல்களுக்கு வாய்ப்பு
கொடுக்கப்படும். திமுகவின் வழக்கறிஞர் அணி பெரியது என்பதால் இந்த முறையும்
வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 13
பொறியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள்:
அதேபோல் 9 மருத்துவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.எம்பி தேர்தலிலும்
டாக்டர். எஸ் செந்தில்குமார் போன்ற மருத்துவர்களுக்கு திமுகவில் வாய்ப்பு
வழங்கப்பட்டது போல சட்டசபை தேர்தலிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் லிஸ்ட்:
1.புதுக்கோட்டை-Dr.முத்துராஜா
2.ஆலங்குளம் - Dr.பூங்கோதை
3.பொள்ளாட்சி - Dr.வரதராஜன்
4.இராசிபுரம் - Dr.மதிவேந்தன்
5. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண்
6. விழுப்புரம்- Dr.லட்சுமணன
7.மைலம்- Dr.மாசிலாமணி
8.பாப்பிரட்டிப்பட்டி- Dr.பிரபு ராஜசேகர்
9.ஆயிரம் விளக்கு- Dr.எழிலன்
தேர்வு:
முனைவர்கள்:
இது போக 6 முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
20 முதுகலை பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 4 இளங்கலை
ஆசிரியர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 20
இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமும் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை சல்லடை போட்டு
தேர்வு செய்துள்ளார் என்பது உறுதியாகிறது. படித்தவர்கள், மருத்துவர்கள்,
பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு துறையை சேர்ந்தவர்களை சல்லடை
போட்டு தேடி எடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் திமுக தேர்வு செய்த
வேட்பாளர்கள் போலவே இவர்களும் நல்ல பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் .
No comments:
Post a Comment