தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சி தேர்தலில் தோல்வி அடையும் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம்
கூறியதாவது: அதிமுக
அரசு தோல்வி பயத்தில்தான் அதிக விளம்பரங்களை வெளியிடுகிறது. அதிமுகவின்
மிருக பலமான பணம்தான் தேர்தலில் பெரிய சவாலாக இருக்கும்.
பாஜகவும் தமிழகமும்
தமிழகத்தில் எப்போதும் தேசியமும் திராவிடமும்தான் ஜெயிக்கும். தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜக. அந்த கட்சியின் இந்துத்துவா அரசியல், இந்தி திணிப்பு, ஜாதிவெறி அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தேர்தலில் தோல்வியைத்தான் சந்திக்கும்.
பணமதிப்பிழப்பில் மர்மம்
மத்திய பாஜக அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய ஒரு மர்மம் இருக்கிறது. எதற்காக ரூ1000, ரூ500 நோட்டு செல்லாது என அறிவித்தார்கள்? பின் ரூ2,000 நோட்டு ஏன் அச்சடித்து அதை நிறுத்தினார்கள்? மத்தியில் புதிய அரசு அமைந்து விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளியே வரும்.
சசிகலா விவகாரம்
சசிகலா தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஏன் கவலைப்பட வேண்டும்? அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள்தான் கவலைப்பட வேண்டும். தமிழக சட்டசபை தேர்தல் ஓரளவு நியாயமாக நடக்கும் என நம்புகிறேன்.
மைனஸ் மதிப்பெண்
தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் வரும் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகத்தான் இருக்கும். தமிழக மக்களை துச்சமாக கருதும் அதிமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் தங்களது வலிமையை காட்டுவார்கள். தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மைனஸ் மதிப்பெண்தான் போட முடியும். இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment