செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டமானது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஜியாவுதீன் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பாக விளக்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை ஒருங்கினைப்பாளர்கள், ஜெ.யோகானந்த், எம்.வி.இளம்பரிதி, எஸ்.அரவிந்த்குமார், ஏ.மூர்த்தி, மு.கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பது உறுதி எனவும், இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இன்றைய நவீன உலகத்திற்கேற்ப தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானது எனவும், மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
சுமார் 500 தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுராந்தகம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் காதி.மோகன், செய்யூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வசந்த் ராஜ், உத்திரமேரூர் விஷ்ணு, காஞ்சிபுரம் மகேந்திரன், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர், கே.பிரகாஷ், எஸ்.பிரகாஷ், முரளி, திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் செயலியின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடையே தி.மு.க.வின் வரலாறு மற்றும் அன்றாட நிகழ்வுகளை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், சட்டமன்ற தேர்த்தலுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கேற்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பல முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment