செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர்
ஆகிய பகுதிகளில் உள்ள நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கூமோ பவுண்டேஷன் டிரஸ்ட் ஆப்
இந்தியா சார்பாக கடந்த 06.05.2020 அன்று கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு
உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் ஏழை எளிய
நலிவடைந்த குடும்பத்தினர்ளுக்கு உதவும் பொருட்டு மொனகா நாட்டில் அமைந்துள்ள கூமோ பவுண்டேஷன்
நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அதன்படி, மதுராந்தகம்
வட்டம், அகிலி, செண்டிவாக்கம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள
சுமார் 250 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களானது அகிலி
ஊராட்சி செயலர் தசரதன் முன்னிலையில் செண்டிவாக்கம் ஆர்.சி.பள்ளி மூலமாக அருட்பணி.ரேமண்ட்
மற்றும் கூமோ பவுண்டேஷன் திட்ட இந்திய மேலாளர் சார்லஸ் குழந்தை ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த
13.02.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும் என ஆல்பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு
மருத்துவர் புவனேஸ்வரி மற்றும் சுகாதார ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும்
காலகட்டத்திலேயே முன்கூட்டியே நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும்
ஏற்ப பொதுமக்களின் தேவைகளின் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த கல்வி நிறுவனத்தை
பொதுமக்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர்.
No comments:
Post a Comment