144 ஊரடங்கு
உத்தரவின் போது தொடர்ந்து மறைமலை
நகர் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
மற்றும் சமூகப் பணிகளில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்ட மறைமலைநகர் தன்னார்வ
இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
கொரானா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு நகராட்சி நிர்வாகத்தால் முற்றிலும் தடை செய்யப்பட்ட தே.நெ -3 பகுதியில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் வேலை இழந்தவர்களுக்கு உணவளித்தல் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மட்டுமின்றி காவல்நிலையத்திலும் தன்னார்வளராக பணிபுரிந்து பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தவர் சுஜித்.
கடந்த 04.05.2020 அன்று தே.நெ -3 பகுதியில் 250க்கும் மேற்பட்ட வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு நகராட்சி ஆணையர் விஜய குமாரி முன்னிலையில் நிவாரண பொருட்களை சுஜித் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.
250 குடும்பத்தினர்களுக்கு தலா 5 கிலோ அரிசி 5 கிலோ காய்கறிகள் கோதுமை மாவு மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது
தன்னார்வ இளைஞர்களின் சமூக சேவையை நகராட்சி ஆணையர் விஜய குமாரி மனதார பாராட்டினார்.
இந்த நிகழ்வை நகராட்சி ஆணையர் விஜயகுமாரி துவக்கிவைத்தார். அதைதொடர்ந்து முன்னாள் எம்.சி ரவிகிருஷ்ணன், சேசாத்திரி முருகன் சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், தே.நெ-3 பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் முரளி, விஷ்ணு, செந்தில், பிரவீன், சதிஷ், கவிகார்த்தி, ஜோஷ்வா, அஜித் முத்துகார்த்தி, நரேஷ், டேனியல், மேத்யூராஜ், ரஞ்சித், ராஜசேகர், மனோ ஜீவா,ரோகித், இளைஞர்கள் இணைந்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

No comments:
Post a Comment