செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம்
கரியச்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக ஊராட்சி செயலாளருமான சேகர் தனது
சொந்த செலவில்
560 குடும்பங்களுக்கு
3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினார்.
கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும்
கடந்த மார்ச் மாதம்
25 ஆம் தேதி முதல்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர், வேலைக்கு செல்லாமல் இருப்பதால்
வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பெரும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின்
ஆணைக்கிணங்க தி.மு.க.வினர்
அந்தந்த பகுதிகளில்
வீடுகள் தோறும் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதுபோல் திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட 560
குடும்பங்களுக்கு தி.மு.க ஊராட்சி செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான
சேகர் தனது சொந்த செலவில் தலா ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, பருப்பு,
காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
மொத்தம்
3 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வேலை நிமித்தமாக
வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் எனவும் முக கவசம்
கட்டாயம் அணியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மக்கள் நிவாரண உதவிகள் வழங்கியமைக்கு திமுக ஊராட்சி செயலாளருக்கு நன்றி
தெரிவித்தனர். இதில் அலமேலு என்டர்பிரைசஸ் உரிமையாளர் எஸ்.சுரேஷ் மற்றும் முன்னாள்
வார்டு உறுப்பினர் செல்வமணி மற்றும் மோகன்ராஜ் உட்பட கிராம இளைஞர்கள்
உடனிருந்தனர்.
No comments:
Post a Comment