செங்கல்பட்டு மாவட்டம்,
செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டத்திற்குட்பட்ட மழுவங்கரணை மற்றும் பெருக்கரணை
பகுதிகளில் வசிக்கும் இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் குடும்பங்கள்
என சுமார் 30 குடும்பங்களுக்கு மதுராந்தகம் ராஜா டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மதுராந்தகம்
வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும்
காய்கறிகள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
கொரோனா
தடுப்பு ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பின்றி அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கும்
கடும் சிரமப்பட்டுவரும் மழுவங்கரணைப் பகுதியைச் சேர்ந்த 12 குடும்பங்கள் மற்றும் பெருக்கரணை
பகுதியைச் சேர்ந்த 18 குடும்பங்கள் என 30 இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற
விதவைகள் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment