செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.9, பள்ளிப்பேட்டை
சாலை பகுதியில் வசிக்கும் 200 நலிவடைந்த குடும்பத்தினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு
மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில் அச்சிறுபாக்கம் பேரூராட்சி
தி.மு.க.வினர் சார்பாக ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.டி.ஆர்.வி. எழிலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், அச்சிறுபாக்கம் பேரூர் தி.மு.க செயலாளர் எஸ்.உசேன், அச்சிறுபாக்கம் பேரூர் முன்னாள் தலைவர் கோதண்டராம ரெட்டியார், பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம், அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் எஸ்.மஸ்தான், கிளை பிரதிநிதி எம்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஜெயமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
No comments:
Post a Comment