செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெளியம்பாக்கம் கிராமத்தில்
“ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சுமார் 20 இருளர் இன குடும்பங்களுக்கு
காய்கறிகள் 13.04.2020 அன்று வழங்கப்பட்டது.
காய்கறிகள் மற்றும்
உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுவரும் இருளர்
இன மக்களுக்கு “ஹெல்ப் பாஃர் ஆல்” என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குமரேசன் தலைமையில்
காய்கறி பைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக அனைத்து
இருளர் இன மக்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அச்சிறுபாக்கம் மண்டல
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இருளர்
இன மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எப்படி தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
என விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அச்சிறுபாக்கம் வட்டார
வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) எ.சிவக்குமார் (கி.ஊ பொறுப்பு) மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள துப்புரவு பணியாளர்கள்,
ஓ.எச்.டி. ஆப்பரேட்டர்களுகு முகக்கவசம், கையுறை மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான சுகாதாரப்
பணி உபகரணங்கள் அந்தந்த ஊராட்சி செயலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து வெளியம்பாக்கம்
ஊராட்சியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன்
முகக்கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment