செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் நகர்பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில் கொரோனா அச்சிறுத்தலை பொறுத்படுத்தாமல்
கடையின் உள்ளே 10 நபர்களும், கடைக்கு வெளியே 5 நபர்களும் அமர்ந்து இருந்தனர்.
எவரும்
முகக்கவசம் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளியும் விடவில்லை. எனவே, பொதுமக்கள் நலன்
கருதி அந்தப் பகுதியில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்
லட்சுமிபிரியா அந்த சலூன் கடைக்கு சீல் வைத்துள்ளார்.
இந்த
தருணத்தில் சீல் வைத்த கடையினை மூன்று மாதங்களுக்கு திறக்க இயலாது என்பது அரசின் உத்தரவு
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment