கொரோனா பாதிப்புகளில்
உலகில் பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் வியட்நாமில்
ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அரிசி ஏ.டி.எம். துவங்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் இன்றைய
தேதி வரை 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர உயிரிழப்பு ஏதுமில்லை.
இந்த அரிசி முற்றிலும்
இலவசமாக வழங்கப்படுகிறது. 6 அடி சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என கூறப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏ.டி.எம். இயந்திரமானது சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
தினமும் குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி ஏ.டி.எம் இயந்திரத்தினை தன்னார்வலர்கள் நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் குறிப்பிட்ட நேரக்கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி ஏ.டி.எம் இயந்திரத்தினை தன்னார்வலர்கள் நிறுவியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment