செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற
உறுப்பினர் சு.புகழேந்தி முகக்கவசம் மற்றும் கிருமிநாசினியை வழங்கினார்.
சுகாதாரப் பணியாளர்கள்
ஓய்வின்றி கொரோனாவை ஒழிக்க பாடுபட்டுக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் அவர்களின்
நலனை கருதி முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்ட சுயபாதுகாப்பு பொருட்களை அச்சிறுபாக்கம்
பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமியிடம் வழங்கினார்.
மேலும், கொரோனா
வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது அச்சிறுபாக்கம் பகுதியில் எந்த நிலையில்
உள்ளது என்பதையும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment