செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 31.03.2020 மற்றும் 01.04.2020 தொகுதியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளிடமும்
கொரோனா முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டத்தினை நடத்தினார்.
அச்சிறுபாக்கம்
வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம்,
கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் அரசு மருத்துவமனை, அச்சிறுபாக்கம், மோச்சேரி
எண்டத்தூர் மருத்துவமனை, மதுராந்தகம் காவல் நிலையம், அச்சிறுபாக்கம் காவல் நிலையம்
என அனைத்து இடங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
இன்று காலை
(01.04.2020) மதுராந்தகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காய்கறி, பழக்கடைகளை
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியாவுடன் இணைந்து துவக்கி வைத்து சமூக
விலகல் மற்றும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை பற்றி வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
விளக்கினார்.
ஊர்காவல்படை காவலர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முகக் கவசங்களை வழங்கியதுடன் அவர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு பணிகளைப் பற்றியும்
கேட்டறிந்தார்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் கொரோனா வைரஸ் தொடர்பான தொகுதி ஆய்வுகளின் தொகுப்பு:
No comments:
Post a Comment