செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று தமிழ்புத்தாண்டு விடுமுறை தினம்
என்றாலும், தொடர்ந்து 21நாட்கள் விடுப்பு ஓய்வின்றி
பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.கேசவனுடன் இணைந்து அலுவலக பணியாளர்கள் அனைத்து
பணிகளையும் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதாலும், கொரோனா நோய் பரவலை
தடுக்க வேண்டும் என்பதாலும், மக்களுக்கு
அடிப்படை தேவைகளை பூர்த்தி
செய்து தருவது தங்களது
கடமை என்பதை எண்ணிய கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் தனது ஊழியர்களுடன் இணைந்து
சிறிதும் சோர்வின்றி மக்களின்
மனநிறைவுடன் பணிசெய்தனர்.
மக்களுக்கு தேவையான முக்கிய மளிகை பொருட்களை
வீடுதேடி வழங்கும் பணியை வணிகர்களுடன் இணைந்து டோர்டெலிவரி சேவையினை
துவக்கியுள்ளனர்.
காய்கறி மட்டுமின்றி மளிகை
பொருட்களான, மஞ்சள் தூள்,
குழம்பு தூள், மல்லி தூள், மிளகு, டீ தூள், ரவை, கோதுமை மாவு, சன்பிளவர் ஆயில், அரிசி,
நொய், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சபருப்பு, உடைத்தகடலை,
பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கடுகு, சீரகம்,
உப்பு, சேமியா, மற்றும்
தேங்காய் தேங்காய் அடங்கிய தொகுப்பு பொருட்களும் வீடு தேடி மக்களுக்கு வழங்கியதால்
பேரூராட்சி மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தமிழ்ப் புத்தாண்டை எவ்வித சிரமமின்றி கொண்டாடி
மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment