செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் ஊராட்சியில்
சுமார் 50 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கையடுத்து
வெளியே செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு காய்கறி,
அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி. முனுசாமி
தலைமையில் அச்சிறுபாக்கத்தில் இயங்கிவரும் மகிழ்ச்சி இல்லம் என்ற தொன்டு நிறுவனத்தின்
நிறுவனர் பொய்யாமொழி வழங்கினார்.
No comments:
Post a Comment