செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கி குழுவினர் ஆய்வு
மேற்கொண்டனர்.
மண்டல கண்காணிப்பு அலுவலர் உதயசந்திரன் இ.ஆ.ப.,
காவல்துறை ஐஜி.நாகராஜன், இ.கா.ப., செங்கல்பட்டு மாவட்ட
ஆட்சியர் ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட
வருவாய் அலுவலர், சுகாதார இணை இயக்குனர், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா ஆகியோர் கருங்குழி பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை
ஆய்வு செய்தனர். பின்னர் கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில்
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும், மேலவலம்பேட்டை பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்த இடத்திற்கு முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதா என்பதை கேட்டறிந்தார். கருங்குழி
பேரூராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்வதைப்
பற்றி கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகியோர்
விரிவாக எடுத்துரைத்தனர்.
No comments:
Post a Comment