செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு காரணமாக
வெளியே வரமுடியாமலும் போதிய உணவு வசதி இல்லாமலும் இருக்கும் முதியோர்கள், ஊனமுற்றோர்கள்
மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தமிழக அரசின் நிவாரண
உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த
நிவாரண பொருட்கள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா மேற்பார்வையுடன்
ஆதவரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,
அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,
வீடற்ற ஏழைகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் ஆகியோருக்கு 09.04.2020-ல் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதேபோன்று எலப்பாக்கம், வையாவூர் கிராமங்களில் முதியவர்கள், ஊனமுற்றோர்களுக்கு அரசின்
மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மதுராந்தகம்
வட்டம், சிதன்டி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு தனியார் பங்களிப்புடன் 15 இருளர்
குடும்பங்களுக்கும் 2 முதியவருக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ எண்ணெய், 1 கிலோ பருப்பு,
1 கிலோ சர்க்கரை, உப்பு, சோப்புகள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
மேலும்,
செய்யூர் வட்டம், சூணாம்பேடு கிராமத்தில் வசிக்கும் 15 நரிக்குரவர் இன மக்கள் குடும்பங்களுக்கு
தமிழக அரசின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதே
போன்று மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் உள்ள வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை
வங்கி வணிகத் தொடர்பாளர்கள் மூலமாக வீடுதோறும் வழங்கப்படுவதையும் மதுராந்தகம் வருவாய்
கோட்டாட்சியர் லட்சுமிபிரியா உறுதி செய்தார்.
No comments:
Post a Comment