செங்கல்பட்டு
மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில்
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள
நிலையில் அப்பகுதியில் உள்ள இருளர் இன
மக்களுக்கும், மணமை ஊராட்சியில் பணிபுரியும்
தூய்மை பணியாளர்களும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தேவையா அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட
பொருட்களை அதிமுக காஞ்சி மத்திய
மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர்
மாமல்லபுரம் ஜி ராகவன் ஏற்பாட்டில்
காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர்
திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மணமை ஊராட்சி செயலாளர்
எஸ் ஆர் பிரகாசம் முன்னாள்
ஊராட்சி மன்ற துணை தலைவர்
சோமு சமூக ஆர்வலர் கமலக்கண்ணன்,
உமாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment