வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பாதுகாப்புடன் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் | Corona Relief Cash and Ration Given to people in Acharapakkam | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 02, 2020

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பாதுகாப்புடன் வழங்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் | Corona Relief Cash and Ration Given to people in Acharapakkam | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம்  பேரூராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின்படி, பொதுமக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித்தொகை மற்றும் உணவு பொருட்கள் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 4 , காந்திநகர் 5 வது தெருவில் உள்ள நியாய விலை கடையில் இன்று (02.04.2020) பேரூராட்சி செயல் அலுவலர் .சி.முனுசாமி அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. 
பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரண உதவித்தொகை மற்றும் உணவு பொருட்களை வாங்கிச் சென்றனர். அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் தனசேகர், காவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.



 

No comments:

Post a Comment