செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம்
பேரூராட்சியில் கொரோனா வைரஸ் நோய்
தடுப்பு நடவடிக்கையின்படி, பொதுமக்கள் பாதிக்காத வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண
உதவித்தொகை மற்றும் உணவு பொருட்கள்
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 4 , காந்திநகர்
5 வது தெருவில் உள்ள நியாய விலை
கடையில் இன்று (02.04.2020) பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி அவர்கள்
முன்னிலையில் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் சமூக
இடைவெளியை பின்பற்றி நிவாரண
உதவித்தொகை மற்றும் உணவு பொருட்களை
வாங்கிச் சென்றனர். அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்
தனசேகர், காவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment