செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வைரஸின் உருவத்தை விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் ஓவியமாக வரைந்து அதில் விழித்திரு தனித்திரு வீட்டிலிரு எனும் வாசகத்தை வரைந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும் விஜய் மக்கள் இயக்க திருக்கழுக்குன்றம் ஒன்றிய,நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறினர். மேலும், இந்த செயலுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment