செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பல்வேறு கொரேனா விழிப்புணர்வு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று அச்சிறுபாக்கம் ஜி.எஸ்.டி
கூட்ரோடு பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று
வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும்
“வீட்டில் இருப்போம் கொரோனாவை எதிர்ப்போம்” என்ற வாசகம் மற்றும் கொரோனா வைரஸினை விரட்டும்
படம் அடங்கிய பிரம்மாண்ட ஓவியமானது அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி
அவர்களின் தலைமையில் வரையப்பட்டது.
அச்சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி,
சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், காவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment