கொரோனா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி ஆர் சிலையருகேயும் ,
மார்க்கெட் பகுதியிலும் 26.04.2020 அன்று காலை 10.00 மணியளவில் கொரோனா விழிப்புணர்வு
தெரு கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனிசேகர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஜம்பேரி கிராமம் ஓம் ஸ்ரீ மாதா கன்னீகா பரமேஸ்வரி கலை நிகழ்ச்சி நாடக சபா குழவினர் மூலம் நடைப்பெற்ற இந்த தெரு கூத்து நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்தும் தனித்திரு விலகியிரு வீட்டில் இரு என அறிவுறுத்தியும் கலை நிகழ்ச்சியினர் ஆடி பாடியும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர் போல் வேடமணிந்தும்.
நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். தெரு கூத்து களைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளாக அரிசி காய்கறி உள்ளிட்டவைகளை மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் வழங்கினார்.
இதில் முன்னால் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்பிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாம்பாக்கம் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment