வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு ஆட்சியர் நடத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கைஆய்வுக் கூட்டம் | Chengalpattu Collector Inspecting Corona Situation in Madurantakam | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, April 03, 2020

செங்கல்பட்டு ஆட்சியர் நடத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கைஆய்வுக் கூட்டம் | Chengalpattu Collector Inspecting Corona Situation in Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 03.04.2020 அன்று
காலை 11 மணியளவில் நடைபெற்றது.


இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, வட்டாட்சியர் வேல்முருகன், மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன்  மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மதுராந்தகத்தில் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சூழலில் அவர்கள் வசித்த தெருக்கள் இரும்பு வேலி கொண்டு அடைக்கப்பட்டு அங்கு வெளியாட்கள் யாரும் வரவேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரால் மதுராந்தகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியானது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Containment Zone)-ஆக அறிவித்து அந்த பகுதியிலிருந்து யாரும் உள்ளேயோ அல்லது அங்குள்ளவர்கள் வெளியேயோ செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்பது குறிப்பிட்டுள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் வரை உள்ள சுற்றுவட்டாரம் ஆகும்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினந்தோறும் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவார்கள் எனவும், மேற்கண்ட பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 
 
மேலும் சம்மந்தப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment