செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சி சார்பாக 204 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு
அச்சிறுபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி தலைமையில் கொரோனா நிவாரணப்
பொருட்கள் வழங்கப்பட்டது.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியின் வார்டு 2 மற்றும்
3-க்குட்பட்ட பழைய காலணி, வண்டிக்குப்பம் காலணி, கோதண்டம் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளைச்
சார்ந்த 204 நலிவடைந்த குடும்பத்தினர்கள் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும்
பொருளாதாரச் சுமையால் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி
சார்பாக வெங்காயம், தக்காளி அடங்கிய தலா 3 கிலோ காய்கறிகள், 5 கிலோ அரிசி உள்ளிட்ட
கொரோனா நிவாரண உதவிப் பொருட்களை செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி முன்னின்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கே.பாலசுந்தரம், முன்னாள் பேரூராட்சித்
தலைவர் பட்டாபி, முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த
முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வேலவன், தமிழ் மாநில காங்கிரஸ் பேரூராட்சி தலைவர் சுரேஷ்,
மனிதநேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஷாஜகான், புரட்சி பாரதம் ஒன்றியச் செயலாளர் சரத்குமார்,
புரட்சிபாரதம் நகரச் செயலாளர் விஜயகுமார் போன்ற அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் சைமன், நவரத்தினம்,
சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment