செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் தெரிவிக்கும் அன்பான எச்சரிக்கை...
உலகமே கொள்ளை நோயை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டறிய முடியாமல் திணறிவரும் சூழலில், நமது அரசு நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக பொதுமக்கள் அவரவரது வீடுகளிலும், இருப்பிடங்களிலும் தனித்து இருக்க வேண்டியதன் அவசியம் கருதி பிறப்பித்துள்ள, ஊரடங்கு உத்தரவு மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 கீழ் தடை உத்தரவு ஆகியன அமலில் உள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில், ஒருசில பொதுமக்கள்
சட்டத்தை மீறுகின்ற வகையிலும், சமூக பொறுப்பு இல்லாமல், கொள்ளை நோய்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில், அத்தியாவசிய தேவைகள் எதுவுமில்லாமல் ஊர்சுற்றும் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் காவல்நிலையம் மற்றும் ஒரத்தி காவல்நிலைய பகுதியில்,இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவையின்றி ஊர்சுற்றிக் கொண்டிருந்த 61 நபர்களை இன்று ஒரேநாளில் பிடித்து அனைவரதுமீதும், தொற்று நோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைவரது இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இனிமேல் தவறு செய்யாமல் இருக்க, வாகன ஓட்டிகள் அனைவரும் கடுமையான எச்சரிக்கையுடன் ஜாமீன் பெற்று, அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நோய் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் சட்டத்தை மதித்தும் சமூகநலன் மீது அக்கறை கொண்டும் வெளியே வரும் எண்ணமுடைய பொதுமக்கள் இனியேனும் விழிப்புணர்வு பெற்று, வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தனித்து இருங்கள்!
வீட்டில் இருங்கள்.!
D.S. சரவணன்
ஆய்வாளர்
அச்சிறுப்பாக்கம்,
காவல்நிலையம்.

No comments:
Post a Comment