செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் நேற்று (01.04.2020) முக்கிய வீதிகளில்
தீயனைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மதுராந்தகம் காவல் ஆய்வாளர்
ருக்மாங்கதன் முன்னிலையில், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் தீயனைப்புத்
துறையினர் கிருமிநாசினி கலந்த நீரை சாலைகள், வீடுகள் மற்றும் கடைகளின் முன்பக்கங்களில்
தெளித்து கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை ஏற்ப்பாடுகளை மேற்கொண்டனர்.
கருங்குழி பேருந்து
நிறுத்தம், மசூதி வளாகம், பஜார் வீதி, பள்ளிகூட வளாகங்கள் என பல்வேறு இடங்களில் தீயனைப்பு
நிலைய அலுவலர்கள் குமார் (பொறுப்பு), பரமசிவம் ஆகியோருடன் இணைந்து தீயனைப்பு வீரர்கள்
மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினியை தெளித்தனர்.
No comments:
Post a Comment