வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 25 லட்சம் நிதியை பரிந்துரை செய்து வழங்கிய மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Madurantakam MLA giving 25 Lakhs for Corona Activities
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 02, 2020

25 லட்சம் நிதியை பரிந்துரை செய்து வழங்கிய மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Madurantakam MLA giving 25 Lakhs for Corona Activities


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டம் 2020-21-ன் கீழ் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்கும் செலவுகள் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்வதற்காக முதல் தவணையாக ரூ.25.00 லட்சம் நிதியினை பரிந்துரை செய்து அதற்காக அதிகார்வபூர்வ கடிடத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் இன்று (02.04.2020) வழங்கினார்.
31.03.2020 மற்றும் 01.04.2020 ஆகிய இரு தினங்களில் தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு செய்த எம்.எல்.ஏ, தற்போது கொரோனா தொற்று நோய் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் அதற்காக மருத்துவ உபகரணங்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் இல்லாததை கண்டு கவலையுற்றார்.
இதனடிப்படையில் தொகுதியின் தலைமை மருத்துவமனையான மதுராந்தகம் அரசு மருத்துவமனையினை மேம்படுத்தும் நோக்கில் ரூ.25.00 லட்சம் நிதியினை முதல் தவணையாக தனது தொகுதி நிதியிலிருந்து பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment