செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத்
திட்டம் 2020-21-ன் கீழ் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சையளிக்கும்
செலவுகள் மற்றும் சிகிச்சைக்கான மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்வதற்காக முதல் தவணையாக
ரூ.25.00 லட்சம் நிதியினை பரிந்துரை செய்து அதற்காக அதிகார்வபூர்வ கடிடத்தினை செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் இன்று (02.04.2020) வழங்கினார்.
31.03.2020 மற்றும்
01.04.2020 ஆகிய இரு தினங்களில் தனது தொகுதிக்குட்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும்
கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு செய்த எம்.எல்.ஏ, தற்போது கொரோனா தொற்று நோய் நாளுக்கு
நாள் பெருகிவரும் நிலையில் அதற்காக மருத்துவ உபகரணங்கள் இங்குள்ள மருத்துவமனைகளில்
இல்லாததை கண்டு கவலையுற்றார்.
இதனடிப்படையில் தொகுதியின் தலைமை மருத்துவமனையான மதுராந்தகம்
அரசு மருத்துவமனையினை மேம்படுத்தும் நோக்கில் ரூ.25.00 லட்சம் நிதியினை முதல் தவணையாக
தனது தொகுதி நிதியிலிருந்து பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment