செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழியில் காவல் துறையினருடன் இணைந்து மதுராந்தகம் வருவாய்
கோட்டாட்சியர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
நேற்று சுமார் 2.30 மணியளவில் சென்னையிலிருந்து
திருவண்ணாமலை நோக்கி சென்ற காய்கறி லாரியில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்ததை
கண்ட மதுராந்தகம் ஆர்.டி.ஓ லட்சுமிபிரியா 50 தோப்புக்கரணம் போடச் சொல்லி அவர்களுக்கு
நூதன தண்டனையை வழங்கினார்.
மேலும், இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் வாகனத்தின்
உரிமத்தை ரத்து செய்வோம் என வாகன ஓட்டுநரை எச்சரித்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
புகழேந்தி அந்த பகுதியின் வழியே வந்தபோது இந்த 20 நபர்களுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment