செங்கல்பட்டு மறைமாவட்டத்தின்
சார்பாகவும், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் மூலமாகவும் முதலமைச்சர் நிவாரண
நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
ஆயர் டாக்டர்.ஏ.நீதிநாதன் தலைமையில் பேரருள் தந்தை
பாக்கிய ரோஜிஸ், மறைமாவட்ட நிதி நிர்வாகி ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் அச்சிறுபாக்கம் மழை
மலை மாதா அருள்தல அதிபர் ஆர்.லியோ எட்வின்
ஆகியோர் இணைந்து 09.04.2020 அன்று காலை 11 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்
லூயிஸை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக
வழங்கினர்.
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சார்பாக ரூ.10 லட்சம்
மற்றும் அச்சிறுபாக்கம் மழை மலை மாதா அருள்தளம் சார்பாக ரூ.2 லட்சம் காசோலையாக செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment