செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த வெங்கடேசபுரத்தில் அன்னதான சிவம் ஶ்ரீலஶ்ரீ
ஐயப்ப சுவாமிகள் அவர்களின் 113-வது அவதாரத் திருநாளையொட்டி அவரது பக்த கோடிகள் இணைந்து
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மேலும், சிறுக்கரனையில்
வசிக்கும் நரிக்குறவர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான ஏற்பாடுகளை
லயன் முருகன், கண்ணன், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் தற்போது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தினால் உரிய அனுமதியுடன் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு இந்த அன்னதான நிகழ்வை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில்,
வி.டி.ஆர்.வி. எழில், அண்ணாமலை நாயக்கர், ஏழுமலை நாயக்கர், விநாயகம், நாகராஜ், தங்கராஜ்,
ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இன்று
துவங்கிய இந்த அன்னதான நிகழ்வானது வரக்கூடிய காலங்களில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில்
தொடரும் என பக்தர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment