செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம்
வட்டங்களில் உள்ள கிராமங்களில் தர்பூசணி பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக
இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு
அமலுக்கு வந்தது.
இதனால் சென்னை கோயம்பேடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தங்களது தர்பூசணி பழங்களை அனுப்ப முடியாததால் தர்பூசணி விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.
இதனால் விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்யாமலேயே தங்களது நிலங்களிலேயே காய்ந்துவிடும் நிலைக்கு விட்டுவருகின்றனர். இந்த பழங்களை வாங்க யாரும் வராத காரணத்தினால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இந்நிலையில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மேற்கண்ட தாலுக்காவில்ஆய்வு செய்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதாகவும், இந்த பழங்களை அறுவடை செய்து சந்தைபடுத்த இயலாமல் போகும் சூழல் வந்தால் விவசாயிகள் பேரிழப்பை சந்திப்பார்கள் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தர்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதால் தொடர்பாக முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செங்கை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.
இந்த சூழலில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தெரிவிக்கையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் தர்பூசணி பயிர் செய்து அறுவடை செய்ய இயலாமல் உள்ள விவசாயிகள் தங்களது பழங்களை ஏற்றுமதி செய்ய வண்டி தயார் செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

No comments:
Post a Comment