செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்
வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மதூர் ஊராட்சியில் நேற்று
(19.03.2020) மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தலைமையில் கொரோனா விழிப்புணர்வு
முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மதூர் கிராமத்தைச் சார்ந்த இருளர் குடியிருப்புப்
பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து
தங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் போன்றவைகளைப் பற்றி செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தவிழிப்புணர்வு முகாமில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெரோம்
ஆனந்த், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
ஏழுமலை, மதூர் ஊராட்சி செயலர் ராஜி, கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க எப்படி கை கைழுவ வேண்டும் மற்றும் எப்படி நமது சுகாதாரத்தை
மேலும் வலுப்படுத்த வேண்டும் போன்றவைகளைப் பற்றி ஊராட்சி செயலர் ராஜி அவர்கள் செயல்முறை
விளக்கத்தோடு விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமின் இறுதியாக மதுராந்தகம்
கோட்டாட்சியர் அவர்கள் மதூர் கிராமத்தில் வசித்து வரும் 10 இருளர் இன மக்களுக்கு சாதிச்
சான்று மற்றும் இறுப்பிடச் சான்றினை வழங்கினார்.
No comments:
Post a Comment